ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டார் நடிகையாக திகழ்ந்தவர் விஜயசாந்தி. சினிமா வாய்ப்புகள் குறைந்தபோது அரசியலில் பிரவேசித்தார். முதலில் பிஜேபியில் இணைந்த அவர், பின்னர் சோனியா காந்தியை சந்தித்து காங்கிரசில் இணைந்தார். என்றாலும், தனக்கு கட்சியில் சரியான இடம் கிடைக்கவில்லை என்று அரசியலில் இருந்து விலகி மறுபடியும் சினிமாவில் நடிக்க தயாரானார்.
சிரஞ்சீவி நடிக்கயிருக்கும் சைரா நரசிம்ம ரெட்டி உள்பட இரண்டு படங்களில் நடிக்க முடிவெடுத்து தனது உடல் எடையையும் கணிசமான அளவு குறைத்தார் விஜயசாந்தி. ஆனால் பேச்சுவார்த்தை நடத்திய படங்களில் அவர் எதிர்பார்ப்பது போன்ற முக்கியத்துவம் வாய்ந்த வேடங்கள் கிடைக்கவில்லையாம். இதனால் சிறிய வேடங்களில் நடித்து தனது இமேஜை கெடுத்துக்கொள்ள வேண்டாம் என்று கமிட்டான படங்களில் இருந்து விலகி விட்டார் விஜயசாந்தி.
அதையடுத்து மீண்டும் அரசியலில் பிரவேசிக்க முடிவெடுத்த அவர், டில்லி சென்று ராகுலை சந்தித்து தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் இறங்கப்போவதாக தெரிவித்துள்ளார். அதோடு, தெலுங்கானாவில் ஆளுங்கட்சிக்கு எதிரான போராட்டங்களை தீவிரப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்த தயாராகிக்கொண்டிருக்கிறார் விஜயசாந்தி.