புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
முகவரி, தொட்டி ஜெயா, நேபாளி உள்ளிட்ட பல படங்களை இயக்கிய வி.இசட் துரை, தற்போது ஏமாலி என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் சாம் ஜோன்ஸ் என்ற புதுமுகத்துடன் காதல் கண் கட்டுதே படத்தில் நடித்த அதுல்யா நடிக்கிறார். இதன் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
அந்த டீசரில் அதுல்யா படு கவர்ச்சியாக உடை அணிந்துள்ள காட்சியும், சிகரெட் புகைக்கும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. இது சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்தை பெற்றது. அதுல்யா தனது பேஸ்புக்கில் "டீசர் காட்சிகள் யார் மனதையாவது வருத்தியிருந்தால் மன்னிப்பு கேட்கிறேன்" என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து வி.இசட்.துரை கூறியதாவது : அதுல்யா வருத்தப்படத் தேவையே இல்லை. காரணம் கதை அப்படி, இன்றைய இளைஞர்கள் காதலை டேக் இட் ஈசியாக பார்க்கிறார்கள். பிரேக்அப், பிக்அப், பார்ட்டி, அவுட்டிங், டேட்டிங் எல்லாம் சர்வசாதாரணமாக நடக்கிறது. அதைத்தான் படத்தில் காட்டியிருக்கிறேன். கதைக்கு என்ன தேவையோ அந்த காட்சிகள் படத்தில் இருக்கும். படத்தை தணிக்கைக்கு கொண்டு போகும்போது தணிக்கை குழுவினர் ஆட்சேபம் தெரிவித்ததால் அந்த காட்சிகளை நீக்குவேன். ஆனால் கதைக்கு மிக மிக அவசியமாக இருப்பதால் நீக்க மாட்டார்கள் என்ற நம்புகிறேன். அதனால் அதுல்யா வருத்தப்படவும் தேவையில்லை. மன்னிப்பு கேட்கவும தேவையில்லை. என்றார்.