டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
துல்கரின் நடிப்பில் வெளியான கடந்த சில படங்கள் அவருக்கு திருப்தி தந்திருக்கலாமோ என்னவோ, ஆனால் துல்கரின் ரசிகர்களை பெரிதும் திருப்திப்படுத்தவும் இல்லை. வணிக ரீதியாக சோபிக்கவும் இல்லை. அதனால் ஒரு கமர்ஷியல் ஹிட்டுக்கு தயாராகும் துல்கர், லால்ஜோஸ் டைரக்சனில் தான் நடிக்கவுள்ள 'ஒரு பயங்கர காமுகன்' படத்தை பெரிதும் எதிர்பார்க்கிறார்.
வரும் டிசம்பர் மாதம் இந்தப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருக்கிறார். கிராமத்து பின்னணியில் முழுக்க முழுக்க ரொமாண்டிக் லவ் ஸ்டோரியாக உருவாக இருக்கிறது இந்தப்படம். ஏற்கனவே 'விக்ரமாதித்யன்' படம் மூலமாக நூறுநாள் வெற்றியை ருசித்த இந்த கூட்டணி 'ஒரு பயங்கர காமுகன்' படத்திலும் அந்த அதிசயத்தை நிகழ்த்தும் என எதிர்பார்க்கலாம்.