மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில், வெளிநாடுகளில் அவ்வப்போது கலை நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம். அதன்படி, நடிகர் சங்கத்தில் கட்டப்பட்டு வரும் கட்டடத்திற்கு நிதி திரட்டும் வகையில், அடுத்தாண்டு, ஜனவரி 6ம் தேதி, மலேசியாவின், கோலாலம்பூரில் உள்ள புக்கிஜாலி அரங்கில் பிரமாண்டமான நட்சத்திர கலைவிழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் இப்போதே துவங்கியுள்ளன.
முதற்கட்டமாக டிக்கெட் விற்பனையை மலேசிய விளையாட்டுத்துறை துணை அமைச்சர் டத்தோ சரவணன், மலேசிய புக்கிஜாலி அரங்கில் துவக்கி வைத்தார். இதில் நடிகர் சங்க தலைவர் நாசர், துணை தலைவர் கருணாஸ், மற்றும் பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட நடிகர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.