பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஹாலிவுட் படங்களில் சற்று வித்தியாசமானது ஜுமான்ஜி. இது ஒரு அதிரடி ஆக்ஷ்ன் விளையாட்டு படம். இந்த விளையாட்டை ஆட ஆரம்பித்தால் அதற்குள் புகுந்த நிஜமான அனுபவத்தை பெறலாம். வெற்றி பெற்றால் தான் விளையாட்டிலிருந்து வெளிவர முடியும்.
1995ம் ஆண்டு ஜுமான்ஜி வெளிவந்தது. மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது ஜுமான்ஜி வெல்கம் டு தி ஜங்கிள் என்ற படம் வெளிவருகிறது. அதே விளையாட்டு படம்தான். இம்முறை விளையாடுகிறவர்கள் சிறுவர்கள் அல்ல பெரியவர்கள். விளையாட்டு நடக்கும் இடம் அடர்ந்த காடு.
இந்தப் படத்தை ஜேக் கஸ்டன் இயக்கி உள்ளார். கொலம்பியா பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. டுவைன் ஜான்சன், ஜாக் பிளாக், கெவின் ஹார்ட், கெரன் ஜிலன், நிக் ஜோன்ஸ் உள்பட பலர் நடித்துள்ளனர். ஹென்னி ஜேக்மேன் இசை அமைத்துள்ளார், குயலி படாஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் உலகம் முழுவதும் வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகையன்று வெளிவருகிறது. 3டி மற்றும் ஐமேக்ஸ் 3டி தொழில்நுட்பத்திலும் வெளிவருகிறது. இந்தியாவில் ஆங்கிலத்துடன் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் வெளிவருகிறது.