பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
கமல் - ஷங்கர் கூட்டணியில் 1996ம் ஆண்டு வெளியான படம் இந்தியன். கமல் இரண்டு வேடங்களில் நடித்திருந்த இந்த படத்தில் இந்தியன் தாத்தா வேடம் பெரிய அளவில் பேசப்பட்டது. அதோடு ஏ.ஆர்.ரகுமான் இசையும் படத்தின் வெற்றிக்கு பெரும் துணையாக இருந்தது. பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட்டாகின.
இந்த நிலையில், மீண்டும் கமல் - ஷங்கர் கூட்டணியில் இந்தியன்-2 உருவாக இருப்பதை ஏற்கனவே அறிவித்து விட்டனர். இந்தியன் படம் ஊழலுக்கு எதிரான கதையில் உருவானது போன்று இந்த படத்திலும் ஊழல் சம்பந்தமான விசயங்களுடன், தற்போதைய அரசியல் நிலவரங்களை முன்னிறுத்தி கதை உருவாகிறது.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கயிருப்பதாக ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. காரணம் ஷங்கரின் பெரும்பாலான படங்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் தான் இசையமைத்திருக்கிறார். ஓரிரு படங்களுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்தார். இந்த நிலையில், அனிருத்தின் பெயர் இந்தியன்-2 படத்தில் அடிபடுவது பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.