வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
நான் ஈ சுதீப், கடைசியாக தமிழில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய முடிஞ்சா இவனை புடி என்ற படத்தில் நடித்தார். தற்போது கன்னடம், தெலுங்கு, இந்தி என பரவலாக நடித்து வரும் அவர், அடுத்தபடியாக சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டியிலும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இந்த நிலையில், ரைஸன் என்றொரு ஹாலிவுட் படத்திலும் நடித்திருக்கிறார் அவர். அந்த படத்தை ஆஸ்திரேலிய டைரக்டர் எடி ஆரியா இயக்கியுள்ளார். திரில்லர் கதையில் தயாராகியுள்ள அப்படம் ஒரு விண்கல் வெடிக்கும் கதையை மையமாகக்கொண்டு உருவாகியுள்ளது. இந்தியன் மார்ஷல் வேடத்தில் சுதீப் நடித்துள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியாகியுள்ளது. அதை சுதீப்பின் ரசிகர்கள் பெரிய அளவில் டிரன்டிங் செய்துள்ளனர்.