ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் |
பிரேமம் படத்தில் அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் சாய் பல்லவி. ஒரே படத்தில் ஒட்டுமொத்த மலையாள மற்றும் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்த அவர், பின்னர் தெலுங்கில் பிடா படத்தில் அறிமுகமானார். அந்த படமும் அவருக்கு பெரிய பெயரை வாங்கிக்கொடுத்தது. இதனால் தற்போது தெலுங்கு மட்டுமின்றி, தமிழ், தெலுங்கில் தயாராகி வரும் படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகிறார் சாய் பல்லவி.
இந்த நிலையில், தெலுங்கில் அவர் நடித்துள்ள இரண்டாவது படம் எம்சிஏ. இந்த படத்தில் நானி நாயகனாக நடித்திருக்கிறார். இப்படத்தின் டப்பிங் பணிகள் நடந்து வருகின்றன. முதல் தெலுங்கு படமான பிடா படத்திலேயே தனக்குத்தானே டப்பிங் பேசி ஆச்சர்யப்படுத்திய சாய் பல்லவி, இப்போது இன்னும் நன்றாக தெலுங்கு பேச கற்றுக்கொண்டு சரளமாக தங்குதடையின்றி டப்பிங் பேசிக்கொண்டிருக்கிறார்.