இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
முன்னணி ஹீரோவுக்கு தீவிர ரசிகைகளும் இருப்பார்கள் தானே. அவர்களுக்கும் தங்களது அபிமான நடிகரின் முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் ஆசை இருக்கும் தானே? அப்படி மெகாஸ்டார் மம்முட்டியின் பெண் ரசிகைகளும் தங்களது ஆசையை தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்களுக்காக மம்முட்டி நடித்து கிறிஸ்துமஸ் பண்டிகையில் ரிலீஸாக இருக்கும் 'மாஸ்டர்பீஸ்' படத்திற்கு ஆழப்புழா மாவட்டத்தில் செங்கனூரில் உள்ள தியேட்டர் ஒன்றில் பெண் ரசிகைகளுக்கென தனியாக சிறப்பு காலை காட்சியை ஏற்பாடு செய்துள்ளனர். மலையாள சினிமா வரலாற்றில் பெண் ரசிகைகளுக்கான காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இதுவே முதன்முறையாம்.