புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
அரசியலில் நுழைய காத்திருக்கும் நடிகர் கமல்ஹாசன், தனது பிறந்தநாளான இன்று மய்யம் விசில் என்ற புதிய ஆப் ஒன்றை அறிமுகம் செய்ய இருப்பதாகவும், இந்த ஆப், ஜனவரி முதல் பயன்பாட்டிற்கு வரும் என்று அறிவித்திருக்கிறார்.
மக்களை இணைக்க #MaiamWhistle, #Theditheerpomvaa, #Virtuouscycles மூன்று ஹேஷ்டேக்களையும் அறிமுகம் செய்துள்ளார். ஆக தொழில்நுட்பத்திற்கு ஏற்றபடி டிஜிட்டல் தளத்தில் கமல் அரசியல் செய்ய இருக்கிறார். கமலின் இந்த விசில் ஆப், கேரள பாணியை பின்பற்றுவதாக தெரிகிறது.
கேரளாவில், கடந்தாண்டு அம்மாநில அரசால், Whistle Now என்ற ஆப் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டது. ஊழலற்ற கேரள மாநிலத்தை உருவாக்கும் விதமாக இந்த ஆப் உருவாக்கப்பட்டது. தற்போது அதேபாணியில் கமலும், MaiamWhistle என்ற பெயரில் ஆப் ஒன்றை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.