தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
திரையுலகில் ஒரு நடிகையின் இளமை இருக்கும் வரை தான் அவர்களால் கோலோச்ச முடியும் என்ற ஒரு நிலைமை சில வருடங்களுக்கு முன்பு இருந்தது. ஆனால், இன்று நிலைமை தலைகீழ். 30 வயதைக் கடந்த அழகு நடிகைகள் தான் தென்னிந்தியத் திரையுலகில் இன்னமும் தனி ஈர்ப்புடன் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அப்படி 30 வயதைக் கடந்த நடிகைகளில் ஆயிரம் கோடி அழகியாக அனுஷ்கா மட்டுமே ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்.
'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களிலும் முக்கிய நாயகியாக நடித்தவர் என்ற பெருமை அனுஷ்காவுக்கு உண்டு. ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வசூலித்த படம் 'பாகுபலி 2' என்பதால்தான் ஆயிரம் கோடி அழகி அனுஷ்கா. முதல் பாகத்தில் வயதான அம்மாவாக அனுஷ்காவைக் காட்டி அவரது ரசிகர்களை ஏமாற்றினார்கள். ஆனால், அதற்கு வட்டியும், முதலுமாக இரண்டாம் பாகத்தில் அனுஷ்காவா இது என அவரை பாவாடை, தாவணியிலும் காட்டி ஆச்சரியப்பட வைத்தார்கள். அதற்காக சிலபல கோடிகள் செலவு ஆனது தான் என்றாலும், அழகுக்கு மேலும் அழகு சேர்க்கும் விஷயமாகவே அது அமைந்தது.
உலக அழகி, பிரபஞ்ச அழகி என அழகிப் பட்டங்களை வென்ற ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா ஆகியோர் கூட ஒரு சில 100 கோடிப் படங்களைத்தான் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், அனுஷ்கா எந்தப் பட்டங்களையும் வெல்லாமல் ரசிகர் மனங்களை வென்று ஆயிரம் கோடிப் படத்தை கொடுத்து அசத்தியிருக்கிறார்.
அடுத்தும், 'பாக்மதி' படம் மூலம் பாராட்டுக்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார். இன்று பிறந்த நாள் காணும் அனுஷ்காவுக்கு நமது வாழ்த்துகள்.