இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
விக்ரம் மகள் அக்ஷிதாவிற்கும், திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.கமுத்துவின் மகள் வயிற்று பேரனும், கெவின் கேர் நிறுவனத்தலைவர் சி.கே.ரங்கநாதன் மகன் மனு ரஞ்சித்திற்கும் சென்னையில், திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் திருமணம் நடைபெற்றது. புதுச்சேரி அருகே உள்ள பட்டானூரில் அமைந்திருக்கும் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் வரவேற்பு நடைபெற்றது.
இதில் தொழிலதிபர்கள், அரசியல் கட்சியின் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், மணமக்களின் உறவினர்கள், நண்பர்கள், கெவின் கேர் குழும ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். இவர்களுடன் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா என பல பகுதியிலிருந்து வந்திருந்த விக்ரமின் ரசிகர்களும் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
வரவேற்பு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மெல்லிசை கச்சேரி நடந்தது. அப்போது ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பலத்த ஆரவாரங்களுக்கிடையே "ஓ பட்டர்ப்ளை..." பாடலை பாடினார் விக்ரம். மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சில் பாடகராக மாறிய விக்ரமை கண்டு அனைவரும் ஆச்சர்யம் அடைந்தார்கள்.