இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
பாகுபலி இரண்டாம் பாகத்துக்கு பிறகு அனுஷ்கா நடிப்பில் வெளிவர இருக்கிற படம் பாக்மதி. இதில் அனுஷ்காவுடன் அதிதி பினிஷெட்டி, ஜெயராம், உன்னி முகுந்தன். ஆஷா சரத் ஆகியோர் நடிக்கிறார்கள். தமன் இசை அமைக்கிறார். ஆர்.மதி ஒளிப்பதிவு செய்கிறார். சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற சித்ரங்கடா படத்தை இயக்கிய ஜி.அசோக் இயக்குகிறார். ஹாலிவுட் தரத்தில் உருவாகும் த்ரில்லர் படம்.
தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது. சுமார் 125 கோடி ரூபாய் பட்ஜெட்டில் வம்சி கிஷ்ணா ரெட்டி தயாரிக்கிறார். அனுஷ்காவின் பிறந்த தினத்தையொட்டி படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. படத்தை தமிழில் ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா வெளியிடுகிறார். ஜனவரியில் படம் வெளிவருகிறது.