வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் |
முகவரி, தொட்டி ஜெயா, நேபாளி உள்பட பல படங்களை இயக்கியவர் வி.இசட்.துரை. அவர் இப்போது இயக்கிவரும் படம் ஏமாலி. இதில் சமுத்திரகனி, அதுல்யா, சாம் ஜோன்ஸ், பால சரவணன் உள்பட பலர் நடிக்கிறார்கள். சாம்.டி.ராஜ் இசை அமைக்கிறார். எம்.ரத்தீஷ் கண்ணா, பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார்கள். எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதுகிறார்.
இந்தப் படம் இன்றைய இளம் தலைமுறையினர் காதலையும், காமத்தையும் எப்படி பார்க்கிறார்கள் என்பது மாதிரியான கதை. சமீபத்தில் இதன் டீசர் வெளியிடப்பட்டது. அதில் இடம்பெற்ற வசனங்களும் காட்சிகளும் வைரலாகியுள்ளது. அதில் அதுல்யா கழிப்பறையில் அமர்ந்து சிகரெட் புகைக்கும் காட்சியும், கவர்ச்சி உடை அணிந்து அழகை காட்டும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. காதல் கண்கட்டுதே படத்தில் யதார்த்தமாக நடித்து கவனம் பெற்ற கோயம்புத்தூர் பொண்ணு அதுல்யா. டீசர் வெளியானது முதல் அதுல்யாவை பேஸ்புக்கிலும், டுவிட்டரில் கடுமையாக விமர்சித்தார்கள் ரசிகர்கள். குறிப்பாக அதுல்யாவின் கோயம்புத்தூர் நண்பர்கள்.
இதுகுறித்து அதுல்யா தனது பேஸ்புக் டுவிட்டரில் கூறியிருப்பதாவது: டீசரில் இடம்பெற்றிருக்கும் காட்சிகளை வைத்து படத்தில் நான் நடித்திருக்கும் கேரக்டர் பற்றி தீர்மானித்து விடாதீர்கள். அது பாசிட்டிவான கேரக்டர். நல்ல விஷயங்களை பேசுகிற கேரக்டர். இருந்தாலும் டீசரில் வெளியான காட்சிகளுக்காக நானும் வருந்துகிறேன். அந்த காட்சிகளை படத்திலிருந்து நீக்கும்படி இயக்குனரையும் கேட்டுக் கொள்கிறேன். என்கிறார் அதுல்யா.