பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், கௌரவ் நாராயணன் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன் மற்றும் பலர் நடிக்கும் படம் 'இப்படை வெல்லும்'. இப்படம் நாளை மறுநாள் நவம்பர் 9ம் தேதி வெளியாக உள்ளது. உதயநிதி நடிக்கும் படம் ஒவ்வொன்றையும் வெளியீட்டிற்கு முன்பாகவே தவறாமல் பார்த்துவிடுவார் அவருடைய அப்பா மு.க.ஸ்டாலின். அது போல 'இப்படை வெல்லும்' படத்தையும் தன் குடும்பத்தாருடன் பார்த்து ரசித்துள்ளார்.
படம் பார்க்க வந்த அவரை தயாரிப்பாளர் ராஜு மகாலிங்கம், இயக்குனர் கௌரவ் நாராயணன் உள்ளிட்டவர்கள் வரவேற்றனர். படத்தைப் பார்த்து ரசித்துப் பாராட்டிய மு.க.ஸ்டாலினுக்கு, ராஜு மகாலிங்கம் நன்றி தெரிவித்துள்ளளார். படத்தின் இயக்குனர் கௌரவ் நாராயணன், படத்தைப் பார்த்த மு.க.ஸ்டாலின், 'இப்படை நிச்சயம் வெல்லும்' எனப் பாராட்டியதாகத் தெரிவித்துள்ளார்.
'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்திற்குப் பிறகு அப்படிப்பட்ட ஒரு வெற்றியை இதுவரை உதயநிதி ஸ்டாலின் கொடுக்கவில்லை. அவர் முதல் முறையாக வெளிக் கம்பெனியில் நடித்துள்ள இந்தப் படத்தையும் மிகப் பெரிய அளவில் விளம்பரப்படுத்தவில்லை. எச்.ராஜா இப்படம் ஓடாது என்று பதிவு செய்ததை வைத்தாவது ஒரு சர்ச்சையை உருவாக்கலாம் என இயக்குனர் நினைத்தார். ஆனால், யாரும் அதைப் பற்றிப் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. 'இப்படம் வெல்லுமா', அல்லது மற்ற படத்தை வெல்ல வைக்குமா என்பது இரண்டு நாளில் தெரிந்துவிடும்.