தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
'விவேகம்' படத்தை தொடர்ந்து அஜித் அடுத்து நடிக்கும் படத்தையும் சிவாவே இயக்குகிறார் என்று கடந்த சில வாரமாகவே செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தது. இந்த செய்திகள் ஏறக்குறைய தற்போது உறுதியாகிக் கொண்டிருக்கிறது.
அஜித்குமாரின் 58-ஆவது படமாக உருவாகவிருக்கும் இந்தப்படத்தையும் 'விவேகம்' படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. விவேகம் படத்தினால் விநியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் பல ஏரியாக்களில் நஷ்டமடைந்துள்ளனர். அந்தப் படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனமும் பணத்தை இழந்துள்ளது. இந்த நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காகவே சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்துக்கு மீண்டும் கால்ஷீட் கொடுத்துள்ளாராம் அஜித்.
அஜித்தும் சிவாவும் நான்காவது முறையாக இணையும் இந்தப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார். விவேகம் படத்தில் அனிருத்தின் இசை எடுபடவில்லை. எனவே அனிருத் வேண்டாம் என அஜித்தே சொல்லிவிட்டாராம். டிசம்பர் மாதம் தொடங்கும் இப்படத்தை அடுத்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளனர்.