இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில், சிரஞ்சீவி நடிக்கும் 151வது படம், சைரா நரசிம்மரெட்டி. ஆந்திராவைச்சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை கதையில் இந்த படம் தயாராகிறது. இதில் நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் நடிப்பதற்காக உடல் எடையை குறைத்து வருகிறார் சிரஞ்சீவி.
சரித்திர காலத்து கதை என்பதால், இந்த படத்திற்காக ஐதராபாத்தில் பிரமாண்ட செட் அமைக்கும் பணிகள் நடக்கிறது. மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் முதல் தொடங்கயிருப்பதாக முன்பு அறிவித்திருந்தனர். ஆனால் செட் பணிகள் இன்னும் முடிவடையாததால் இப்போது படப்பிடிப்பை டிசம்பர் 6-ந்தேதிக்கு மாற்றி வைத்துள்ளனர்.
அதோடு, சிரஞ்சீவி, நயன்தாரா ஜோடி சேரும் இந்த படத்தில் அமிதாப்பச்சன், ஜெகபதிபாபு, சுதீப், விஜய் சேதுபதி உள்பட பல முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.