அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் |
விஜய் நடித்து வெளிவந்த 'மெர்சல்' படம் உலக அளவில் 200 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலைப் பெற்று மழைக்காலத்திலும் மக்களை தியேட்டர்களை நோக்கி வரவைத்துக் கொண்டிருக்கிறது. இந்தப் படம் தெலுங்கில் 'அதிரிந்தி' என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வரும் 9ம் தேதி ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் வெளியாக உள்ளது. அதே தினத்தில் விஷால் நடித்து தமிழில் வெளிவந்து சுமாரான வெற்றியைப் பெற்ற 'துப்பறிவாளன்' படமும் 'டிடெக்டிவ்' என்ற பெயரில் தெலுங்கில் டப்பிங் படமாக வெளியாக உள்ளது.
தமிழ்நாட்டில் விஜய் படம் வரும் போது வேறு யாரும் படத்தை வெளியிடத் தயங்குவார்கள். தெலுங்கு என்பதால் விஷால் அவர் நடித்துள்ள படத்தையும் விஜய் படம் அங்கு வெளியாகும் தினத்திலேயே வெளியிடுகிறார். அது மட்டுமல்ல இந்த வாரத்தில் சித்தார்த் நடித்து தமிழில் வெளிவந்த 'அவள்' படம் கூட 'க்ருஹம்' என்ற பெயரில் தெலுங்கில் வெளியாக உள்ளது. இந்த வாரம் தெலுங்கில் டப்பிங் படங்களின் வாரம் என்று சொல்லுமளவிற்கு போட்டி உருவாகியுள்ளது.
விஜய், விஷால், சித்தார்த் ஆகிய மூவரில் யார் படத்திற்கு தெலுங்கு ரசிகர்கள் ஆதரவு கொடுக்கப் போகிறார்கள்?.