Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

உனக்கென்ன மேலே நின்றாய் ஓ கமலஹாசா : விசு கிண்டல்

06 நவ, 2017 - 10:15 IST
எழுத்தின் அளவு:
Actor-Vishu-slams-Kamal

நடிகர் கமல்ஹாசன், அரசியலில் களமிறங்க இருக்கிறார். அதன்வெளிப்பாடாக சமூக சார்ந்த பிரச்னைகளை கையிலெடுத்து அதை வெளிப்படுத்தி வருவதோடு, மத்திய, மாநில அரசுகளையும் விமர்சித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்னர் இந்து தீவிரவாதம் பற்றி அவர் பேசிய கருத்துக்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படுள்ளது. குறிப்பாக இந்துவா அமைப்புகள் கடுமையான வார்த்தைகளை சொல்லி திட்டி வருகின்றனர். இந்நிலையில் பா.ஜ.,வை சேர்ந்தவரும், நடிகரும், இயக்குநருமான விசு, கமல் குறித்து அவரது பாணியில் ஒரு அறிக்கை வெளியிட்டு வெளுத்து வாங்கியிருக்கிறார். அதன் விபரம் வருமாறு...

ஹலோ கமல்ஜீ ..நீங்க நடிச்ச சிம்லா ஸ்பெஷலுக்கு கதை திரைக்கதை வசனம் எழுதின விசு நான்.. பெரிய அரசியல்வாதி ஆயிடுவீங்க வாழ்த்துக்கள். இந்து, மதமும் இந்துக்களும் வடிவேலுவோட பாஷைல சொல்லப் போனா எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாங்க-ங்கறதைப் புரிந்து கொண்டு, அவர்களை சீண்டி விட்டா, யாராவது எங்கேயாவது எகிறுவான், அவனை வச்சு பாலிடிக்ஸ் பண்ணலாம்னு யாரோ ஒரு குள்ள நரி உங்களுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கு.

இந்து மதம் தீவிரவாதிகள் இல்லாத மதம் இல்லைன்னு சொல்ல முடியாது-ன்னு நீங்க எதையோ வழக்கம் போல தலைய சுத்தி வளைச்சு மூக்கைத் தொடப்போக, யாரோ ஒருத்தன் எங்கேயோ மூளைல உங்களைத் தூக்கில போடணும் னு கதறப் போக, அரசியல்ல போணி ஆனவன் ஆகாதவன், அரசியலில் விளங்கினவன், விளங்காம போனவன், அரசியல்ல கொடிகட்டி பறக்கறவன், கொடியை ஆடுமாடு மேய விட்டவன் எல்லாரும், நான், நீன்னு போட்டி போட்டுக்கிட்டு டிவி முன்னாடி வந்து வரிசைல நிக்கறாங்க.

அவங்கவங்க மேதா விலாசத்தைக் காட்ட. ஊடகத்துக்கு அடுத்த 15 நாளைக்குத் தீனி கிடைச்சாச்சு. அடுத்தது இருக்கவே இருக்கு பாயின்ட்ஸ் நான் எடுத்துத் தரேன். பார்ப்பனன்.. ஆரியக்கூட்டம்.. கைபர்/போலன் கணவாய்.. ஆப்கானிஸ்தான்ல ஆடு, மாடு மேச்ச கூட்டம்.... இப்படி ஒவ்வொண்ணா எடுத்து விடுங்க, பிச்சுக் கிட்டு போகும்.

பாவம் உங்களுக்கும் வீட்டுல பொழுது போக வேணாமா, யாருமே இல்லை. தனிக்கட்டை, வயசும் ஆயாச்சு. ஆமாம் உங்களுக்கு BJP மேல அப்படி என்ன சார் கோவம்? சென்சார் போர்டில உங்களுக்கு வேண்டாதவங்களை அதிகாரி ஆக்கினாங்களே அதெல்லாம் இருக்காது அவர் இதுக்கெல்லாம் மேல பாத்தவர்ன்னு நான் சொல்லிட்டேன்.

அது இருக்கட்டும் சார் ஒழுங்கா வரி கட்டறீங்களாமே... அப்படியா? சூப்பர்... புககுல காட்டற வரவுக்குத் தானே? அதாவது 100 ரூபாய் வரும்படின்னா, அதை 40 ரூபாய்ன்னு புக்குல காட்டி, அந்த 40 ரூபாய்க்கு ஒழுங்கா வரி கட்டறீங்க அதானே.. அப்ப மீதி 60 ரூபாய் கருப்பு தானே.
புரியும்படியாக சொல்லுங்க நான் ஒரு ஞானசூனியம், ஒரு யோசனை பையில ஒரு மைக் வச்சுக்குங்க, நாளைக்கே நெய்வேலி போங்க, பழுப்பு நிலக்கரி சுரங்கத்து மேல ஏறி நின்னு சும்மா சுத்தி வேடிக்கை பாருங்க, கூட்டம் கூடும் அது போதும். அதுக்குப் பேரு தான் பப்ளிசிட்டி ஸ்டன்ட். உனக்கென்ன மேலே நின்றாய் ஓ கமலஹாசா ன்னு பாட்டு எங்கேயோ கேக்குது.. ஜமாய்ங்க...!

இவ்வாறு விசு கூறியுள்ளார்.

Advertisement
விஜய்யின் கெட்டப்பை மாற்றுகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்!விஜய்யின் கெட்டப்பை மாற்றுகிறார் ... ரசிகர்களுக்கு அனுஷ்கா கொடுக்கும் பர்த்டே டிரீட் ரசிகர்களுக்கு அனுஷ்கா கொடுக்கும் ...


வாசகர் கருத்து (141)

unmaiyai solren - chennai,இந்தியா
07 நவ, 2017 - 14:59 Report Abuse
unmaiyai solren அனைத்து மதங்களும் நல்லதையே தான் போதிக்கின்றன. அதில் எந்த சந்தேகமும் இல்லை. நிச்சயமாக எந்த மதத்திலும் நூறு சதவிகிதம் புனிதர்கள் கிடையாது. எல்லா மதங்களிலும் நல்லவர்களும் உண்டு, சில தீய எண்ணங்கள், கெட்ட புத்தி கொண்டவர்கள் சிலரும் உண்டு. இது ஒரு குறிப்பிட்ட மதத்தில் மட்டும் தான் உண்டு என சொல்வதே மிகவும் தவறான அணுகு முறையாகும். கமல் குறிப்பிட்டது அந்த ஒரு சிலரை குறிப்பிட்டுத்தானே தவிர ஒட்டுமொத்த மதத்தையும் அல்ல. விசுவுக்கு இதுகூட புரியவில்லை என்பதுதான் ஆச்சர்யம். அல்லது அவர் புரிந்தும் புரியாதது மாதிரி நடிக்கிறார் என்றே தோன்றுகிறது. அவர் ஒரு சிறந்த வசனகர்த்தாவும் நடிகரும் அல்லவா? ஹிந்து மதமும் ஹிந்துக்களும் எவ்வளவு அடித்தாலும் தாங்குவார்கள் என சொல்லும் அவர், கமல் பொதுவாக சாதரணமாக சொன்ன ஒரு உண்மையை கூட விசுவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்பதை வைத்து பார்க்கும்போதே விசுவின் உண்மையான சகிப்புத்தன்மையும், அவர் இவ்வளவு வருடங்களாக பசும்தோல் போர்த்திய புலியாக சினிமாவில், மக்களிடத்தில், நடமாடி வந்துள்ளார் என தெளிவாக புரிகிறது. இப்போதாவது தன் உண்மையான நிறத்தை மக்களிடத்தில் தோலுரித்து காட்டியதற்கு நன்றி. விசு அவர்களே கமல் குறிப்பிட்டது நிச்சயமாக உங்களை போன்ற சில மனிதர்களை குறித்துதான் என நீங்கள் புரிந்துகொண்டால் சரிதான்.
Rate this:
RGanesan -  ( Posted via: Dinamalar Android App )
07 நவ, 2017 - 09:36 Report Abuse
RGanesan விசு சார் ...உங்களின் கருத்து அருமையான து ...இந்துக்களை கேவலப்படுத்தும் இவரைபோன்றவர்களை சட்டம் தண்டிக்கணும்
Rate this:
R.BALAMURUGESAN - Muscat,ஓமன்
07 நவ, 2017 - 09:04 Report Abuse
R.BALAMURUGESAN இன்னும் இந்த நீள நீளமா வசனம் பேசுவதை நிறுத்தவில்லை போல... அதெல்லாம் முடிஞ்சுபோச்சு சாமி, உம்முடைய வசனத்தையெல்லாம் எவனுக்கும் படிக்கவே நேரமில்லை பெரிசு... அவா அவா வேலைய பாருங்கோண்ணா... வோட்டு போடும்போது நாங்க பாத்துக்கிறோம்...
Rate this:
சானா - ramanujapuram,இந்தியா
07 நவ, 2017 - 08:54 Report Abuse
சானா கமல் போன்ற தனி மனித வாழ்வில் சுத்த மில்லாத ....கள் எல்லாம் கலை"தொழிலு"க்குதான் லாயக்கு.அரசியலுக்கு இல்லை.இவன் இந்துக்களை இழிவு படுத்துகிறான்.
Rate this:
vijay -  ( Posted via: Dinamalar Android App )
07 நவ, 2017 - 08:41 Report Abuse
vijay visu yaradhu
Rate this:
மேலும் 136 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Titanic kadhalum kavunthu pogum
  Tamil New Film Seemathurai
  • சீமத்துரை
  • நடிகை : வர்ஷா பொல்லம்மா
  • இயக்குனர் :சந்தோஷ் தியாகராஜன்
  Tamil New Film Marainthirunthu Paarkum Marmam Enna
  Tamil New Film Kaaviyan
  • காவியன்
  • நடிகர் : ஷாம்
  • நடிகை : ஸ்ரீதேவி குமார்
  • இயக்குனர் :பார்த்தசாரதி
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in