'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த துப்பாக்கி, கத்தி என்ற இரண்டு படங்களிலுமே சமூக நோக்கமுள்ள கதைகளில் நடித்தார் விஜய். அந்த இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட்டானதோடு விஜய்-முருகதாஸ் கூட்டணிக்கு ஒரு நல்ல அங்கீகாரம் கிடைத்ததோடு, தற்போது அவர்களின் கூட்டணிக்கு எதிர்பார்ப்பும் அதிகரித்து விட்டது.
இந்தநிலையில், ஸ்பைடர் படத்தின் தோல்வியை விஜய் படத்தை ஹிட் பண்ணி ஈடுகட்டி விட வேண்டும் என்று தற்போது களமிறங்கயிருக்கிறார் முருகதாஸ். மேலும், இந்த படமும் மெர்சல் படத்தைப்போன்று மெகா பட்ஜெட்டில் தயாராகயிருக்கும் நிலையில், விஜய்யை வித்தியாசமான கெட்டப்புக்கு மாற்றப்போகிறாராம் முருகதாஸ். அதனால், தான் உருவாக்கியுள்ள கதையில் அவரை எந்தமாதிரியான கெட்டப்பில் நடிக்க வைக்கலாம் என்று தற்போது பல கெட்டப்புகளை ரெடி பண்ணி வருகிறார் முருகதாஸ். அதனால், விஜய்யின் 62வது படத்தில் இதுவரை பார்க்காத புதிய கெட்டப்பில் விஜய்யை பார்க்கலாம் என்கிறார்கள். அதோடு, இந்த படத்திலும் விஜய் இரண்டு மாறுபட்ட வேடங்களில் நடிக்க இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.