த்ரிஷாவுக்கு சச்சின் கொடுத்த பரிசு! | அதிகாரிகள் தான் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டனர்! ஷாரூக் | விவசாயிகளுக்கு ரூ.30 லட்சம் வழங்கிய அமிதாப்பச்சன்! | டர்ட்டி பிக்சர்ஸ் படம் எனக்கு வேண்டாம் நயன்தாரா! | ரஜினியின் அடுத்த படம் கே.வி.ஆனந்துடன்?! | கார்த்தி பிறந்தநாளில் சகுனி சிங்கிள் ஆடியோ டிராக் ரிலீஸ்! | ஷாரூக்கானுக்கு வாழ்நாள் தடை! | முடிவுக்கு வருமா பெப்சி தொழிலாளர்கள் சம்பளப்பிரச்னை....? இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை | எடியூரப்பா மகனுக்கும் எனக்கும் தொடர்பில்லை! நடிகை ஹரிப்பிரியா! | கொச்சியில் நடிகை உதயதாரா திருமணம் முடிந்தது! |
மார்ச் மாதம் சைப் அலிகானுடன் திருமணம் நடக்க இருக்கையில், நடிகை கரீனா கபூர் கர்ப்பமாக இருப்பதாக புது சர்ச்சை எழுந்துள்ளது. நடிகர் சைப் அலிகானும், நடிகை கரீனா கபூரும் நீண்ட நாள் காதலர்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து இவர்களது திருமணம் தள்ளி போய் வந்த நிலையில், இருவருக்கும் இம்மாதம் 10ம் தேதி நிச்சயதார்த்தமும், அதனைத் தொடர்ந்து மார்ச் மாதம் திருமணமும் நடக்க இருக்கிறது.
இந்நிலையில் நடிகை கரீனா கபூர் கர்ப்பமாக இருப்பதாகவும், அதனால் தான் இப்போது இருவரும் திருமணத்திற்கு அவசரம் காட்டி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதை மெய்யாக்கும் விதமாக கரீனா கபூர் கர்ப்பமாக இருப்பது போன்ற படங்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் விமான நிலையம் ஒன்றில் இருந்து கரீனா கபூர் வந்து கொண்டிருந்தார். பச்சை கலர் டீசர்ட்டும், ஜீன்ஸ் பேண்டும் அணிந்து இருந்தார். அப்போது அவரது வயிறு கர்ப்பமான பெண் போன்று பெரிதாக இருந்தது. அதை சால்வை போட்டு மறைத்து இருந்தார். இதை அங்கிருந்த போட்டோகிராபர் ஒருவர் படம் பிடித்து இன்டர்நட்டில் வெளியிட்டு உள்ளார். வயிறு பெரிதாக இருப்பதற்கு காரணம் கர்ப்பம்தானா...? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் இதனை கரீனா கபூர் தரப்பினர் மறுத்துள்ளனர்.