இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் தற்போது சில புதிய நெறிமுறைகளை வகுத்து வெளியிட்டுள்ளது. அதன்படி இனி தணிக்கை சான்றிதழ் கையில் கிடைக்க 68 நாட்கள் வரை ஆகும்.
தணிக்கை சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும்போது அதை பரிசீலிக்க ஒரு வாரமும், ஆய்வு குழு அமைக்க 15 நாட்களும், ஆய்வு அறிக்கையை தணிக்கை வாரிய தலைவருக்கு அனுப்ப 10 நாட்களும், விண்ணப்பதாரருக்கு தகவல் தெரிவிக்க 3 நாட்களும், நீக்கப்பட்ட காட்சிகளை ஒப்படைக்க 14 நாட்களும், நீக்கப்பட்ட காட்சிகளை ஆய்வு செய்ய 14 நாட்களும், சான்றிதழ் வழங்க 5 நாட்களும் தணிக்கை குழு காலஅவகாசம் எடுத்துக் கொள்ளும். ஆக மொத்தம் 68 நாட்கள். இனி ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டு தணிக்கைக்கு செல்ல முடியாத நிலை உருவாகி உள்ளது. இது தவிர மேலும் சில அறிவுரைகளை தணிக்கை குழு தயாரிப்பாளர்களுக்கு வழங்கி உள்ளது. அது வருமாறு:
தணிக்கை வாரியத்தின் எந்த ஒரு அதிகாரியையும் தொலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொள்ளக்கூடாது. படத் தணிக்கை நிலவரத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பிரத்யேக லாகின் ஐடி, பாஸ்வார்டை பயன்டுத்தி இணையத்தில் நிலவரத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
தங்களுக்கு மத்திய தணிக்கை வாரிய அதிகாரியுடன் நெருக்கம் இருக்கிறது. அதனால், விரைந்து தணிக்கை சான்றிதழை பெற்றுத்தர முடியும் அதற்குப் பதிலாக பணமோ வேறு உதவியோ தருமாறு யாரேனும் கோரினால் அது குறித்து மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் தலைவரிடமோ, தலைமை செயல் அதிகாரியிடமோ புகார் அளிக்கலாம்.
திரைப்படத்துக்கு தணிக்கை வழங்குவதில் எந்தவிதமான தலையீட்டையும் தணிக்கை வாரியம் ஊக்குவிக்காது என்பதைத் தெளிவாக தெரிவித்துக் கொள்கிறோம். என்கிறது தணிக்கை வாரியம்.