கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
உதயநிதி ஸ்டாலின் நாயகனாக அறிமுகமான ஒரு கல் ஒரு கண்ணாடி, இது கதிர்வேலனின் காதல், நண்பேன்டா ஆகிய படங்களில் காமெடியனாக சந்தானம் நடித்த நிலையில், சரவணன் இருக்க பயமேன், பொதுவாக என்மனசு தங்கம் ஆகிய படங்களில் சூரி காமெடியனாக நடித்தார். அதையடுத்து இப்போது உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ள இப்படை வெல்லும் படத்திலும் காமெடியனாக நடித்திருக்கிறார் சூரி.
ஆனபோதும், இந்த படத்தில் அவருக்கு கண்கலங்க வைக்கும் காட்சிகளும் உள்ளதாம். இதுபற்றி சூரி கூறுகையில், தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினுடன் நடிப்பது சந்தோசமாக உள்ளது. அவரது நடிப்பை ஆரம்பத்தில் இருந்தே கவனித்து வருகிறேன். மனிதன் படத்தில் வித்தியாசமாக நடித்திருந்தார். அதையடுத்து இந்த இப்படை வெல்லும் படத்தில் இன்னும் சூப்பராக நடித்திருக்கிறார். ரொம்ப ஸ்டைலிசான தோற்றத்தில் சிறப்பாக நடனமாடியிருக்கிறார்.
ஒரு பாடல் காட்சியில் அவர் தனது கால்களை சுழற்றி எஸ் வடிவத்துக்கு கொண்டு வந்து நடனமாடியிருப்பார். அது அற்புதமாக இருக்கும். அந்தவகையில், ரொம்ப இயல்பாக நடித்திருப்பதோடு நடனமும் ஆடியுள்ளார் உதயநிதி. இந்த படத்திலும் நாங்கள் இருவரும் காமெடி காட்சிகளில் அதிகமாக நடித்துள்ளோம். என்றபோதும், இப்படத்தின் கிளைமாக்ஸில் ஓரிரு காட்சிகளில் கண்கலங்க வைக்கும்படியான காட்சிகளும் எனக்கு கிடைத்துள்ளது.
அதனால் படம் முழுக்க சிரிக்க வைக்கும் நான் கடைசியில் கண்கலங்க வைத்து விடுவேன். அந்த வகையில், இந்த படத்தில் என்னை காமெடியனாக மட்டுமின்றி குணசித்ர நடிகராகவும் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர் கெளரவ் நாராயணன் என்கிறார் சூரி.