ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சமூக வலைத்தளங்களில் திரையுலகப் பிரபலங்கள் பலர் கணக்கு வைத்துக் கொண்டு அவர்களது கருத்துக்களைத் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்கள். பலரும் அதை அவர்களுடைய படங்கள் தொடர்பான புரமோஷன்களுக்கு மட்டும் பயன்படுத்தி வருகிறார்கள்.
நடிகர் ரஜினிகாந்த் யாருக்காவது வாழ்த்து சொல்ல வேண்டும் என்றால் மட்டுமே டுவிட்டரைப் பயன்படுத்துவார். நடிகர் கமல்ஹாசன் மட்டும் சமீப காலங்களில் அரசியல் கருத்துக்களையும், சமூக நலன் சார்ந்த கருத்துக்களையும் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
இருந்தாலும் நடிகர்களில் அதிக தொடர்பாளர்களைப் பெற்ற நடிகராக தனுஷ் மட்டுமே இருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு அவரை டுவிட்டரில் தொடர்பவர்களின் எண்ணிக்கை 60 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இந்த 60 லட்சம் தொடர்பாளர்களும் தனுஷ் படத்தைப் பார்த்தாலே போதும் அவருடைய படம் வெற்றி பெற்றுவிடும்.
நடிகர் ரஜினிகாந்த் 43 லட்சம் தொடர்பாளர்களுடனும், நடிகர் சிவகார்த்திகேயன் 39 லட்சம் தொடர்பளார்களுடனும், சூர்யா 30 லட்சம் தொடர்பாளர்களுடனும், 28 லட்சம் தொடர்பாளர்களுடனும் உள்ளார்கள்.
நடிகர்களை பல லட்சம் பேர் தொடர்ந்தாலும் அவர்கள் பதிவிடும் விஷயங்களை வெறும் ஆயிரக் கணக்கினர் மட்டுமே லைக் செய்கிறார்கள், நூற்றுக் கணக்கானவர்கள் மட்டுமே ரிடிவீட் செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற தொடர்பாளர்கள் எல்லாம் 'ஸ்லீப்பர்களாக' மட்டுமே இருக்கிறார்கள்.