ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் |
சந்தானம் ஹீரோவாக நடிக்கும் படம் 'சக்க போடு போடு ராஜா'. 'விடிவி' கணேஷ் தயாரிக்கும் இந்தப்படத்தை அறிமுக இயக்குநர் சேதுராம் இயக்குகிறார். இந்த படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார் சிம்பு. ஏறக்குறைய இப்படத்தின் பட பணிகள் முடிவடைந்துவிட்ட நிலையில் விரைவில் தணிக்கைக்கு அனுப்ப திட்டமிட்டிருந்தனர்.
சக்கப்போடு போடு ராஜா படத்தில் கடைசி நேரத்தில் ஒரு பாடலை இணைத்திருக்கிறார்கள். சமீபத்தில் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹரிஷ் கல்யாணும், சிம்புவும் அண்மையில் சந்தித்திருக்கிறார்கள். அப்போது ஹரிஷ் கல்யாண் நன்றாக பாடக் கூடியவர் என்பது சிம்புவுக்கு தெரிய வந்ததாம். உடனே அவரை அழைத்து 'சக்க போடு போடு ராஜா' படத்திற்கான டைட்டில் பாடலை பாட வைத்திருக்கிறார் சிம்பு.
இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சில வாரங்களுக்கு முன் நடந்து முடிந்துவிட்டது. இந்த நிலையில்தான் இப்போது ஹரிஷ் கல்யாண் இந்த படத்திற்காக ஒரு பாடலை பாடியிருக்கிறார். அவர் பாடிய பாடல் சக்கப்போடுபோடுராஜா படத்தின் சிடியில் இடம்பெறாது.