ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தற்போது விக்ரம் நடிப்பில் துருவ நட்சத்திரம் படத்தை இயக்கி வரும் கவுதம் மேனன், அடுத்து 4 மொழிப் படம் ஒன்றை இயக்குகிறார். படத்திற்கு ஒன்றாக என்ற தலைப்பு வைத்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தில் அந்தந்த மொழி ஹீரோக்கள் நடிக்கிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார்.
தற்போதைக்கு கன்டன மொழிக்கு புனித் ராஜ்குமார் ஒப்பந்தமாகி இருக்கிறார். தெலுங்கில் நாக சைதன்யாவும், மலையாளத்தில் பகத் பாசிலும், தமிழில் சிம்புவும் நடிக்க பேச்சு நடந்து வருகிறது. நான்கு மொழியை சேர்ந்த இளைஞர்கள் சென்னையில் ஒரு கல்லூரியில் ஒன்றாக படிக்கிறார்கள். படிப்பு முடிந்ததும் தங்கள் மாநிலத்திற்கு திரும்புகிறார்கள். சிலர் சாதிக்கிறார்கள், சிலர் சங்கடப்படுகிறார்கள்.
10 வருடங்களுக்கு பிறகு அமெரிக்காவில் நடக்கும் ஒரு நண்பனின் திருமண விழாவிற்கு இந்த நான்கு பேரும் செல்கிறார்கள். அவர்களின் பயணம், திருமண விழாவில் நடக்கும் சுவாரஸ்ங்கள்தான் கதை களம். நான்கு பேரில் ஒருவர்தான் முக்கியமானவர். அந்த கேரக்டரில் அந்தந்த மொழி ஹீரோக்கள் நடிப்பார்கள். அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்குகிறது.