Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கடைசி நேரத்தில் தத்தளித்த விழித்திரு

04 நவ, 2017 - 10:38 IST
எழுத்தின் அளவு:
Vizhithiru-faced-last-minute-problem

அவள் பெயர் தமிழரசி படத்தை இயக்கிய எழுத்தாளர் மீரா கதிரவன், அதன் பிறகு விழித்திரு என்ற படத்தை தானே சொந்தமாக தயாரித்து இயக்கினார். இதில் கிருஷ்ணா, விக்ராந்த், தன்ஷிகா, வெங்கட்பிரபு, எரிக்கா பெர்ணாண்டஸ், தம்பி ராமய்யா ஆகியோர் நடித்திருந்தார்கள்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தப் படம் தயாரிப்பில் இருந்தது. மீரா கதிரவனுக்கு இருந்த பொருளாதார நெருக்கடி, நடிகர், நடிகைளின் கால்ஷீட் குழப்பம் இவற்றால் படம் தாமதமானது. என்றாலும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே படம் தயாராகி விட்டது.

மீரா கதிரவனுக்கு தொடர்ந்த பொருளாதார நெருக்கடி, பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி போன்ற பல பிரச்னைகளும் சேர்ந்து கொள்ள படத்தை வெளியிடமுடியாமல் தவித்தார். ஒருவழியாக எல்லா பிரச்னைகளும் முடிந்து கடந்த மாதம் 6ம் தேதி வெளிவருவதாக இருந்தது. அப்போது திடீரென தயாரிப்பாளர் சங்கம் ஸ்டிரைக் அறிவித்ததால் அப்போதும் வெளியிட முடியவில்லை.

கடைசியாக நேற்று வெளிவருவதாக அறிவிக்கப்பட்டது. தியேட்டர்களும் புக் செய்யப்பட்டிருந்தது. என்றாலும் பகல் காட்சிக்கு தியேட்டர்களுக்கு படம் வந்து சேரவில்லை. கடைசி நேர கடன் பிரச்னையால் சிலர் லேபில் புகார் கொடுத்து படத்தை நிறுத்தியதாக கூறப்படுகிறது. ஒருவழியா பேச்சு வார்த்தைகள் முடிந்து மாலைக் காட்சிக்குத்தான் படம் தியேட்டருக்கு வந்தது. இதுகுறித்து மீரா கதிரவன் தனது பேஸ்புக்கில் எழுதியிருப்பதாவது:

கடந்த இரண்டு நாட்களாக நொடி உறக்கம் இல்லை. தற்போதும் லேப் வாசலில் என் ரத்தம் உறிஞ்சப்படுவது தெரிந்தும் தடுக்க முடியாமல் தாங்கிக் கொண்டிருக்கிறேன். துரோகத்தின் வல்லமையால் முழுவதும் சாகடிக்கப்பட்டு விட்டதாகவே உணர்கிறேன். ஆனாலும் என் படத்தின் மீதும் மக்கள் மீதும் நம்பிக்கை இருக்கிறது. முழுவதுமாக கொல்லப்பட்டிருக்கிறேன். நான் மீண்டும் உயிர்ப்பித்து வருவது நீங்கள் அளிக்கப் போகும் ஆதரவில் இருக்கிறது. நண்பர்களும், மக்களும் ஊடகத்துறையினரும் எங்களைக் கைவிட மாட்டீர்கள் என்று நம்பிக்கை இருக்கிறது.

இவ்வாறு மீரா கதிரவன் எழுதியிருக்கிறார்.

Advertisement
போலீஸ்க்கு பாராட்டு, கேலி செய்யாமல் உதவ ரசிகர்களுக்கு வேண்டுகோள் : கமல்போலீஸ்க்கு பாராட்டு, கேலி செய்யாமல் ... தத்தளித்த சென்னை : மெர்சல் குழுவினருக்கு விஜய் விருந்து தத்தளித்த சென்னை : மெர்சல் ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film RK Nagar
  • ஆர்.கே.நகர்
  • நடிகர் : வைபவ்
  • நடிகை : சனா அல்தாப்
  • இயக்குனர் :சரவண ராஜன்
  Tamil New Film Jippsy
  • ஜிப்ஸி
  • நடிகர் : ஜீவா
  • நடிகை : நடாஷா சிங்
  • இயக்குனர் :ராஜூ முருகன்
  Tamil New Film Chennai 2 Bangkok
  Tamil New Film Amman Thayee
  • அம்மன் தாயி
  • நடிகர் : அன்பு (புதியவர்)
  • நடிகை : ஜூலியானா
  • இயக்குனர் :சரண் (புதியவர்)

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in