'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
கடந்த நவ-1ஆம் தேதி கேரளாவின் பிறவி நாள் அன்று படகு சவாரி செய்த அமலாபால் அந்த புகைப்படத்தை பதிவிட்டதுடன் இப்படி பயணம் செய்வதற்கு வரி ஏதும் கட்ட தேவையில்லையே என்றும் கிண்டலாக கேட்டிருந்தார். இதற்கு டுவிட்டரில் பதிலளித்த நடிகர் ஆர்யா, “சாலை வரியை மிச்சப்படுத்த நீங்கள் படகு சவாரியை செய்கிறீர்கள் என நினைக்கிறேன்” என கூறியவர் சும்மா ஜோக்கிற்காக என்றும் குறிப்பிட்டிருந்தார். அதற்கு அமலாபால், “நீங்கள் உங்கள் உடம்பை ரன்னிங், சைக்கிளிங் என டார்ச்சர் செய்து எதிர்காலத்துக்கு சேமிப்பது போலவா..” என திருப்பி கேட்டிருந்தார்.
அதை தொடர்ந்து ஆர்யா சொன்னது தான் ஹைலைட்.. “நான் உங்களுக்காக தான் சேமித்து வைக்கின்றேன், காதல் கொள் அமலா” என்று கூறியவர், இது ஜோக் அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார். அமலாபாலும் “போதும் கிண்டல்” என உரையாடலை நிறைவு செய்துள்ளார். அமலாபாலுடன் இரண்டு படங்களில் இணைந்து நடித்துள்ள ஆர்யா ஏதாவது சூசகமாக சொல்ல வருகிறாரா என்ன..?