தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழில் மாநகரம்' படம் மூலம் கவனிக்கப்படும் ஹீரோக்களில் ஒருவராக ஆகிவிட்ட சந்தீப், இங்கே வருவதற்கு முன் தெலுங்கில் சில படங்களில் நடித்து டீசன்ட்டான ஹிட் படங்களை கொடுத்துவிட்டே வந்துள்ளார். அப்படி அவர் நடித்த ஒரு படம் தான் 'ரொட்டீன் லவ் ஸ்டோரி'.. இன்று தெலுங்கில் வெளியாகியுள்ள ராஜசேகர் நடித்துள்ள 'பிஎஸ்வி கருட வேகா' படத்தின் இயக்குனர் பிரவீண் தான் அந்தப்படத்தையும் இயக்கியிருந்தார்.
அந்தப்படத்தை சொந்தமாக தயாரித்த பிரவீண், போகிற போக்கில் சந்தீப் உள்ளிட்ட ஒருசிலரையும் கூட்டாக சேர்த்துக் கொண்டாராம். ஆனால் படத்தில் சொன்ன பட்ஜெட்டை விட அதிகமாக செலவாகவே, சந்தீப் அதற்கு கணக்கு கேட்டாராம். அதனால் சந்தீப்பின் பணத்தை திருப்பி கொடுத்துவிட்டு பின் தனது காசில் படப்பிடிப்பை நடத்திய இயக்குனர் பிரவீண், தற்போதும் சந்தீப்புடன் நல்ல நட்பில் தான் இருக்கிறாராம்.