10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு |
புதுமுக நடிகை நடிக்கவிருந்த படத்தில் நடிகை ஸ்ரேயா ஒப்பந்தமாகியிருக்கிறார். தமிழ்ப்பட வாய்ப்புகள் இல்லாததால் இந்தி மற்றும் தெலுங்குப்படங்களில் கவனம் செலுத்தி வரும் ஸ்ரேயா, தற்போது மும்பையில் இருக்கிறார். இந்நிலையில் புதுப்பட வாய்ப்பு வந்து ஸ்ரேயாவின் வாசற்கதவை தட்டியிருக்கிறது. இயக்குனரின் நிலைமையை புரிந்து கொண்ட ஸ்ரேயா, அந்த படத்தில் நடித்துக் கொடுப்பதாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.
ஸ்ரேயாவுக்கு அழைப்பு விடுத்த அந்த இயக்குனர் பெயர் சேகர் கம்முலா. புதுமுக நட்சத்திரங்களை மட்டுமே நம்பி படம் இயக்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் டைரக்டர் சேகர், புதிதாக லைப் இஸ் பியூட்டிபுல் என்ற பெயரில் புதிய படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். படத்தின் நாயகியாக அமெரிக்க வாழ் இந்தியப் பெண் ஒருவரை ஒப்பந்தம் செய்தார். ஒப்பந்த செய்த பிறகு கால்ஷீட் ஒதுக்கி விட்டு அமெரிக்கா சென்ற அந்த புதுமுகம், அங்கிருந்து திரும்பவே இல்லையாம். பலமுறை சூட்டிங்கை தள்ளி வைத்த சேகர், இறுதியாக நாயகியை மாற்ற முடிவு செய்தார்.
தனது நிலைமையை நடிகை ஸ்ரேயாவிடம் விளக்கிக் கூறியதுடன், தனது படத்தில் நடித்துக் கொடுக்கும்படி படத்தின் கதையை கூறியிருக்கிறார் சேகர். இதையடுத்து ஸ்ரேயாவும் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறாராம். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் சூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.