Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

உதயநிதி மீது கடுப்பான இயக்குனர் கௌரவ் நாராணயன்

03 நவ, 2017 - 12:27 IST
எழுத்தின் அளவு:
Gaurav-express-his-angry-with-Udayanidhi-indirectly

கௌரவ் நாராயணன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன், சூரி, டேனியல் பாலாஜி மற்றும் பலர் நடித்துள்ள 'இப்படை வெல்லும்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட சூரி பேசும் போது இயக்குனரின் நடிப்பு ஆசையைப் பற்றியும், அவர் மற்றவர்களை வேலை வாங்கும் விதத்தைப் பற்றியும் பாராட்டுவது போல் கிண்டலடித்துப் பேசினார்.

அதன் பின்னர் பேச வந்த படத்தின் இயக்குனர் கௌரவ் நாராணயன், சூரிக்கு பதிலடி கொடுப்பதாக நினைத்துக் கொண்டு படத்தின் நாயகனான உதயநிதி ஸ்டாலினைப் பற்றி மறைமுகமாகத் தாக்கிப் பேசினார். அவர் பேசும் போது, “உதயநிதி ஸ்டாலின் , சூரி கூட்டணியை முதன் முதலாக உருவாக்கியது நான்தான். அவர்களோடு இசையமைப்பாளர் இமானும் இருந்தால் இருக்கும் என இந்த மூவர் கூட்டணியை முதன் முதலாக உருவாக்கி இப்படத்தை ஆரம்பித்தேன்.

ஆனால், படப்பிடிப்பு ஆரம்பித்த சில நாட்களிலேயே, உதயநிதி ஸ்டாலின் என்னிடம் வந்து சார் நாளை முதல் வேறு ஒரு படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளேன் என்றார். அப்புறம் பார்த்தால், உதயநிதி ஸ்டாலின், சூரி, இமான் கூட்டணியில் 'சரவணன் இருக்க பயமேன்' படம் ஆரம்பமானது. அதன் பின் சில நாட்கள் கழித்து வந்து மீண்டும் நாளை முதல் வேறொரு படத்தில் கலந்து கொள்ள உள்ளேன். என்றால் மீண்டும் அதே கூட்டணியில் 'பொதுவாக எம்மனசு தங்கம்' படம் ஆரம்பமானது.

எனது படத்தின் படப்பிடிப்பில் வந்து கலந்து கொண்டு, அந்தப் படங்களின் கதாபாத்திரப் பெயர்களை வைத்து கூப்பிட்டு பேசிக் கொண்டிருப்பார்கள். ஒரு நாள் தயாரிப்பாளரிடம் சென்று என்னுடைய படத்தின் படப்பிடிப்பை ஒரு மாதம் தள்ளி வைத்து விடுகிறேன். அதற்குள் உதயநிதி அந்தப் படங்களை முடித்து வரட்டும் என்று சொல்லி படப்பிடிப்பை தள்ளி வைத்தேன். நான் முதலில் ஆரம்பித்து வைத்த உதயநிதி ஸ்டாலின், சூரி, இமான் கூட்டணி எனது படங்களுக்கு முன்பாகவே இரண்டு படங்களில் சேர்ந்துவிட்டது,” என அவருடைய வெறுப்பை வெளிப்படுத்தினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in