'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கவுதம் கார்த்திக் நடித்த கடல், முத்துராமலிங்கம் உள்ளிட்ட படங்கள் தோல்வியை சந்தித்ததால், சோர்ந்து போயிருந்த அவர், அதன்பின், தொடர்ச்சியாக, 'ஹிட்' படங்களில் நடித்து, முன் வரிசைக்கு வந்துள்ளார்.
ரங்கூன், இவன் தந்திரன் படங்கள் வெற்றி பெற்றதை அடுத்து, சமீபத்தில் அவர் நடித்த, ஹர ஹர மகாதேவகி படம் வெளியாகும் முன், கடுமையான விமர்சனங்கள் வந்தன. ஆனால், ஹர ஹர மகாதேவகி வசூலை வாரி குவித்ததால், அந்த படக்குழுவினர், அதே நட்சத்திரங்களை வைத்து, இரண்டாவது படத்தை தயாரித்து வருகின்றனர். இதனால், உற்சாகம் அடைந்துள்ள கவுதம் கார்த்திக்கிற்கு, அடுத்ததாக, இந்திரஜித் படம் வெளியாகிறது. 'இது, ஆக் ஷன் மற்றும் அட்வெஞ்சர் கலந்த படமாம். இந்த படமும் தனக்கு நல்ல பெயரை பெற்றுத் தரும் என, நம்பிக்கையுடன் இருக்கிறார், கவுதம் கார்த்திக்.