ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
'கலைப்புலி' எஸ்.தாணுவின் வி.கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், விஜய்சந்தர் இயக்கத்தில் விக்ரம், தமன்னா நடிக்கும் படம் 'ஸ்கெட்ச்'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. உடனடியாக டப்பிங் பணியைத் தொடங்க நினைத்தனர்.
விக்ரமோ, கௌதம் மேனன் இயக்கும் துருவ நட்சத்திரம் படத்தில் நடிக்கப்போய்விட்டார். பின்னர் அந்தப் படத்தின் படப்பிடிப்பு முடியாமல் மாதக்கணக்கில் இழுத்துக் கொண்டே போனதால் ஸ்கெட்ச் படபணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. தொடர்ந்து தனது மகளின் திருமண வேலையில் பிசியானார் விக்ரம்.
இந்நிலையில், பல மாத தாமதத்துக்குப் பிறகு இந்த படத்தின் டப்பிங் வேலைகள் இன்று துவங்கியது. இன்று விக்ரம் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கான டப்பிங் நடைபெற்று வருகிறது. டப்பிங் மற்றும் இதர போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை குறுகிய காலத்தில் முடித்து இப்படத்தை டிசம்பர் மாதம் ரிலீஸ் செய்ய உள்ளனர்.
விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளியான 'இருமுகன்' படம் சென்ற ஆண்டு செப்டம்பரில் வெளியானது. 'இரு முகன்' வெளியாகி ஒரு ஆண்டுக்கும் மேலாகியும் விக்ரம் நடித்த படம் வரவில்லை என்பது அவருடைய ரசிகர்களுக்கு வருத்தம்தான்.