திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
பாகுபலி-2 படத்தை அடுத்து பாக்மதி என்ற படத்தில் நடித்துள்ளார் அனுஷ்கா. தமிழ், தெலுங்கில் வெளியாகும் அந்த படத்திற்கு பிறகு இன்னும் அவர் புதிய படத்தில் கமிட்டாகவில்லை. சில படங்களில் பேசி வருகிறார். குறிப்பாக, இனிமேல் டூயட் பாடும் கதைகளை விட, நயன்தாரா பாணியில் கதையின் நாயகியாக நடிப்பதற்கே முதலிடம் கொடுக்கப் போகிறார் அனுஷ்கா.
தற்போது விக்ரம் நடிப்பில் துருவ நட்சத்திரம், தனுஷ் நடிப்பில் எனை நோக்கி பாயும் தோட்டா படங்களை இயக்கி வரும் கெளதம்மேனன் இயக்கும் அடுத்த படத்தில் அனுஷ்கா நாயகியாக நடிப்பதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இப்படம் ஹீரோயினை முதன்மைப்படுத்தி உருவாக உள்ளது.
ஏற்கனவே அஜித்தை வைத்து கெளதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் படத்தில் நாயகியாக நடித்த அனுஷ்கா, கெளதம்மேனன் இயக்கும் புதிய படத்தில் கதையின் நாயகியாக நடிக்கிறாராம்.