‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா |
ஷங்கர் இயக்கத்தில், ரஜினி, அக்சய்குமார் நடித்துள்ள படம் 2.O. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பல தொழில்நுட்ப கலைஞர்கள் ஹாலிவுட் சினிமாவைச் சேர்ந்தவர்களாக இடம் பெற்றுள்ளனர். அவர்களில் ஸ்டன்ட் மாஸ்டர் கென்னி பேட்ஸ் குறிப்படத்தக்கவர்.
இவர்தான் 2.O படத்தில் ரஜினி - அக்சய் குமார் இடம்பெற்ற இரண்டு முக்கிய சண்டை காட்சிகளுக்கு பயிற்சி கொடுத்துள்ளார். இவர் தற்போது பாகுபலி நாயகன் பிரபாஸ் நடித்து வரும் சாஹோ படத்திற்கும் சண்டை பயிற்சி கொடுக்கிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்ற நிலையில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு நவம்பர் மாதம் முதல் துபாயில் நடைபெறுகிறது. அப்போது அங்குள்ள உலகின் மிக உயரமாக புர்ஜ் கலிபா பில்டிங் அமைந்துள்ள பகுதியில் ஒரு சண்டை காட்சியில் நடிக்கிறார் பிரபாஸ். அந்த காட்சிக்கு கென்னி பேட்ஸ்தான் பயிற்சி கொடுக்கிறாராம்.