'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிரபல மலையாள இயக்குனர் கமல் டைரக்சனில் தற்போது 'ஆமி' என்கிற படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார் மஞ்சு வாரியர். இந்தப்படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்க பிருத்விராஜை அழைத்தார் இயக்குனர் கமல். ஆனால் தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்துவரும் பிருத்விராஜ் தனக்கு பதிலாக இளம் நடிகர் டொவினோ தாமஸை கமலிடம் சிபாரிசு செய்துள்ளார்.
ஏற்கனவே, 'என்னு நிண்டே மொய்தீன்' மற்றும் 'எஸ்றா' ஆகிய படங்களில் பிருத்விராஜுடன் இணைந்து நடித்து அவருடன் நட்பில் உள்ளவர் தான் இந்த டொவினோ தாமஸ். ஆரம்பகாலத்தில் இருந்தே மஞ்சு வாரியரின் தீவிரமான ரசிகராக இருக்கும் பிருத்விராஜூக்கு அவருடன் ஒரு படத்திலாவது நடித்துவிடவேண்டும் என்பது ஆசை. ஆனால் தற்போது அப்படி தேடிவந்த வாய்ப்பையும் வேண்டாம் என சொல்லும்படியான சூழ்நிலைக்கு ஆளாகியுள்ளார் பிருத்விராஜ்.