அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
இந்த ஆண்டு அதிகப்படங்களில் நடித்த ஹீரோ விஜய்சேதுபதி மட்டுமல்ல, கௌதம் கார்த்திக்கும் தான். அவரது நடிப்பில் இந்த ஆண்டு 5 படங்கள் வெளியாகியுள்ளன. எனவே கௌதம் கார்த்திக்கைப் பொறுத்தவரை 2017 ஆம் ஆண்டு மறக்க முடியாத ஆண்டாகத்தான் இருக்கும்.
இந்த ஆண்டில் கௌதம் கார்த்திக்கின் முதல் படமாக 'முத்துராமலிங்கம்' வெளியானது. இரண்டாவது படமாக 'ரங்கூன்' திரைக்கு வந்தது. மூன்றாவது படமாக 'இவன் தந்திரன்' வெளியானது. இந்த படத்தை தொடர்ந்து நான்காவது படமாக கடந்த மாதம் 'ஹரஹரமகாதேவதி' வெளியானது.
இந்நிலையில் அவரது நடிப்பில் ஐந்தாவது படமாக 'கலைப்புலி' எஸ்.தாணு தயாரிப்பில் அவர் மகன் கலாபிரபு இயக்கியுள்ள 'இந்திரஜித்' படம் நவம்பர் 24-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. கடல் படத்தில் அறிமுகமான கௌதம் கார்த்திக் இத்தனை காலம் ரேசில் பின் தங்கியிருந்தார்.
கார்த்திக்கின் வாரிசு எடுபடாமல் போய்விட்டாரே என்ற விமர்சனம் எழுந்தது. அவற்றை பொய்யாக்கும் வகையில் தற்போது விஸ்வரூபம் எடுத்து வருகிறார் கௌதம் கார்த்திக்.