தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் |
சிந்துசமவெளி, 'பொறியாளன்', 'வில் அம்பு' முதலான படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முகம் காட்டிய பிறகு தான் ஹரிஷ் கல்யாண் பிரபலமானார். 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு ஹரிஷ் கல்யாண் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
'கிரகணம்' படத்தை இயக்கிய இளன் என்பவர் இந்தப் படத்தை இயக்கவிருக்கிறார். ரொமான்டிக் காமெடிப் படமாக உருவாகவிருக்கும் இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வரும், 'வேலையில்லா பட்டதாரி-2' படத்தில் நடித்தவருமான பெங்களூரைச் சேர்ந்த மாடலான ரைசா சைமன் கதாநாயகியாக நடிக்கிறார்.
இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நவம்பர் 5-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. அதனை தொடர்ந்து 45 நாட்கள் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது. இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார்.
இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க முதலில் ஆரவ்வை தான் அப்ரோச் பண்ணினார்களாம். அவரோ கதையைக் கூட கேட்காமல் சம்பளம் அதிகம் கேட்டாராம், எனவே ஆரவ்வை வேண்டாம் என முடிவு செய்துவிட்டு ஹரிஷ் கல்யாணை கமிட் பண்ணியுள்ளனர்.