Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இல்லத்தரசியாக நடிப்பதில் சலிப்பு ஏற்படவில்லை : பூஜாகுமார்

31 அக், 2017 - 15:29 IST
எழுத்தின் அளவு:
No-bore-act-as-house-wife-says-Pooja-kumar

விஸ்வரூபம், உத்தமவில்லன் ஆகிய படங்களில் கமலுக்கு ஜோடியாக நடித்தவர் பூஜாகுமார். அதன்பிறகு அவருக்கு தமிழில் படவாய்ப்புகள் இல்லை. ஆனால், தெலுங்கில் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது தெலுங்கில் டாக்டர் ராஜசேகர் நடித்துள்ள கருடா வேகா படத்தில் அவரது மனைவியாக நடித்திருக்கிறார்.

இதுபற்றி பூஜாகுமார் கூறுகையில், இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு டாக்டர் ராஜசேகர் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இயக்குனர் சொன்ன திரில்லர் கதை பிடித்திருந்ததால் நடித்தேன். ஆனால் ஸ்பாட்டுக்கு சென்றபோது டாக்டர் ராஜசேகரின் சுறுசுறுப்பை பார்த்து வியந்து விட்டேன். அதோடு, அவருக்கு ஏற்ற மனைவியாக கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறேன்.

நான் தொடர்ந்து மனைவி வேடங்களில் நடிப்பதைப்பார்த்து இது உங்களுக்கு போரடிக்கவில்லையா? என்று சிலர் என்னிடம் கேள்வி கேட்கிறார்கள். என்னைப்பொறுத்தவரை இந்த மாதிரியான வேடங்களில் தான் இயல்புத்தன்மை மாறாத நடிப்பை வெளிப்படுத்த முடியும். விஸ்வரூபம் படத்தில் கமலுடன் அப்படித்தான் நடித்தேன்.
சில படங்களில் அமைதியாக, சில படங்களில் கணவனை நச்சரிக்கும் மனைவியாக என மாறுபட்டு நடிக்கிறேன். கணவனிடமும் காதல் செய்யும் காட்சிகள் எனக்கு அதிகமாக கிடைக்கிறது. ஆக, ஏதோ ஒரு வகையில் நானும் டூயட் பாடிக்கொண்டுதான் இருக்கிறேன். அதனால் தொடர்ந்து மனைவியாக நடிப்பதில் எனக்கு சலிப்பு ஏற்படவில்லை என்கிறார் பூஜாகுமார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in