நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல |
சமீபகாலமாக இந்திய படங்கள் சீனாவில் அதிகளவில் ரிலீஸாகி வருகின்றன. அந்தவகையில் சமீபத்தில், அமீர்கானின் தங்கல் படம் இந்தியாவை விட சீனாவில் மாபெரும் வசூலை குவித்தது. இந்நிலையில் அமீர்கானின் தயாரிப்பில் தீபாவளிக்கு வெளிவந்த சீக்ரெட் சூப்பர்ஸ்டார் படமும் சீனாவில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியானது. இதை அமீர்கானும் உறுதி செய்திருக்கிறார்.
இதுகுறித்து அமீர்கான் கூறுகையில், சீக்ரெட் சூப்பர்ஸ்டார் படம் நிச்சயம் சீனாவில் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் ரிலீஸாகும். அதற்கான பணிகள் துவங்கியுள்ளன என்றார்.