மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் அனைவருக்குமே மக்கள் மத்தியில் நல்ல புகழ் கிடைத்தது. மற்ற போட்டியாளர்களைக் காட்டிலும் தன்னுடைய இயல்பான நடவடிக்கையால் ஓவியா 'பிக் பாஸ்' போட்டியில் பாதியில் வெளியேறினாலும் ஒரு ஸ்டார் ஆக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.
அவரும், ஆரவ்வும் தான் அந்த நிகழ்ச்சியில் அதிகம் கிசுகிசுக்கப்பட்டவர்கள். இருந்தாலும் வெளியில் வந்த பிறகு இருவருமே தெளிவாக உள்ளார்கள். ஓவியா, ஆரவ் ஜோடி சினிமவில் இணைந்து நடித்தால் நல்ல வரவேற்பு இருக்கும் என்று பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், 'பிக் பாஸ்' போட்டியில் கலந்து கொண்ட ஹரிஷ் கல்யாண், ரைசா விரைவில் ஒரு புதிய படத்தில் ஜோடிய சேர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 'கிரகணம்' என்ற படத்தை இயக்கியுள்ள இளன் அடுத்து இயக்க உள்ள புதிய படத்தில்தான் ஹரிஷ் கல்யாண், ரைசா ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளார்களாம்.
இந்தப் படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்க சம்மதம் தெரிவித்துள்ளார். வரும் நவம்பர் 5ம் தேதி இந்த புதிய படத்தின் முதல் பார்வை வெளியாக உள்ளது. 'பிக் பாஸ்' போட்டியாளர்களின் முதல் ஜோடிப் படமாக இப்படம் தயாராகப் போகிறது. விரைவில் இன்னும் பல போட்டியாளர்களின் பட அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம்.