பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
சமூக வலைத்தளங்களில் இருக்கும் பரபரப்புகளுக்குக் காரணமானவர்கள் அஜித், விஜய் ரசிகர்கள் தான். அவர்கள் இல்லையென்றால் பலர் சமூக வலைத்தளங்களை விட்டே ஓடியிருப்பார்கள். ஒருவரை அவரது ரசிகர்கள் புகழ்ந்தால் மறுபக்கம் அவரை எதிரணி ரசிகர்கள் வறுத்தெடுப்பது வழக்கமாகிவிட்டது. நேற்று 'மெர்சல்' படம் தமிழ்நாட்டில் 100 கோடியை வசூல் செய்தது டிரென்டிங்கில் போய்க் கொண்டிருக்க, மற்றொரு பக்கம் 'தல 58' என்பதும் டிரென்டிங்கில் இருந்தது.
'மெர்சல்' வெற்றிக்காக அட்லீயை விஜய் ரசிகர்கள் ஒரு பக்கம் புகழ்ந்து கொண்டிருக்க, மறுபக்கம் 'தல 58' படத்திற்காக சிவாவை அவர்கள் வம்பிழுத்துக் கொண்டிருந்தார்கள். ஏன், அஜித் ரசிகர்களே கூட 'தல 58' படத்தை சிவா இயக்குவது பிடிக்காமல் கடந்த சில நாட்களாக பல பதிவுகளைப் போட்டு வருகிறார்கள். சிவா தான் அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப் போகிறார் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையிலும் இப்போது அதற்கு புகைச்சல் ஆரம்பமாகிவிட்டது.
இருந்தாலும் விஜய் ரசிகர்கள், அட்லீ, விஜய்க்கு அடுத்தடுத்து 'தெறி, மெர்சல்' என இரண்டு சூப்பர் ஹிட்டுகளைக் கொடுத்துவிட்டார். அந்த அளவிற்கு சிவாவால் அஜித்திற்கு ஒரு சூப்பர் ஹிட்டைக் கொடுக்க முடியவில்லை. 'வேதாளம்' படம் கூட சுமாரான வெற்றிதான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். 'விவேகம்' என்ற ஒரு தோல்வி சிவாவை கடுமையான விமர்சனத்திற்குள் தள்ளியிருக்கிறது.