த்ரிஷாவுக்கு சச்சின் கொடுத்த பரிசு! | அதிகாரிகள் தான் மூர்க்கத்தனமாக நடந்து கொண்டனர்! ஷாரூக் | விவசாயிகளுக்கு ரூ.30 லட்சம் வழங்கிய அமிதாப்பச்சன்! | டர்ட்டி பிக்சர்ஸ் படம் எனக்கு வேண்டாம் நயன்தாரா! | ரஜினியின் அடுத்த படம் கே.வி.ஆனந்துடன்?! | கார்த்தி பிறந்தநாளில் சகுனி சிங்கிள் ஆடியோ டிராக் ரிலீஸ்! | ஷாரூக்கானுக்கு வாழ்நாள் தடை! | முடிவுக்கு வருமா பெப்சி தொழிலாளர்கள் சம்பளப்பிரச்னை....? இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை | எடியூரப்பா மகனுக்கும் எனக்கும் தொடர்பில்லை! நடிகை ஹரிப்பிரியா! | கொச்சியில் நடிகை உதயதாரா திருமணம் முடிந்தது! |
சேவை வரியை எதிர்த்து பிப்.23-ம் தேதி இந்திய அளவில் நடக்கும் போராட்டத்தில், தமிழ் சினமாவும் பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் திரைப்படங்களுக்கான சேவை வரியை மத்திய அரசு விதித்தது. இதற்கு தமிழ் சினிமா, இந்தி சினிமா, தெலுங்கு சினிமா உள்ளிட்ட இந்திய சினிமாக்கள் அனைத்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக அந்தந்த மாநிலங்களில் உள்ள திரைப்பட சங்கங்கள், இந்த சேவை வரியை அரசு ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன. மேலும் மத்திய அரசிடமும் நேரில் மனுக்களும் அளித்தனர். ஆனால் எந்த ஒரு பலனும் இல்லை.
இந்நிலையில் இப்பிரச்னையில் அடுத்த கட்டமாக, ஒரு நாள் ஸ்டிரைக்கில் ஈடுபட முடிவெடுத்துள்ளனர். வருகிற பிப்.23ம் தேதி இந்திய சினிமா பெடரேஷன் சார்பில் இந்த போராட்டத்தில் பங்கேற் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாலிவுட், டோலிவுட் என பல்வேறு மாநில சினிமா சங்கங்கள் போராட்டத்தில் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இதில் தமிழ் சினிமாவும் பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தயாரிப்பாளர் சங்க தலைவரும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இந்த போராட்டத்தால் அன்றைய தினம், இந்திய முழுக்க எந்த சினிமா சூட்டிங்கும் நடக்காது என்பது குறிப்பிடத்தக்கது.