தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஜி.வி.பிரகாஷ் நடித்த டார்லிங் படத்தில் தமிழுக்கு வந்தவர் நிக்கி கல்ராணி. முதல் படத்திலேயே பேய் வேடத்தில் நடித்து மிரட்டிய அவருக்கு அந்த படம் ஹிட்டாக அமைந்ததால் அடுத்தடுத்து தமிழில் புதிய படங்களை கைப்பற்றினார். வெற்றி தோல்வி இரண்டையும் சந்தித்து வரும் நிக்கி கல்ராணி, ஹர ஹர மகாதேவகி படத்தில் நடித்து அடல்ட் பட நடிகையானார்.
என்றாலும், அதே இமேஜை தொடர விடக்கூடாது என்பதற்காக அதையடுத்து கெளதம் கார்த்திக் மீண்டும் நடிக்கும் அடல்ட் ஒன்லி படமான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடிக்க அழைத்தபோது மறுத்து விட்டார். அதுமட்டுமின்றி வேறு சில இயக்குனர்களும் சில ஆபாச கதைகளுடன் நிக்கி கல்ராணியை முற்றுகையிட்டனர். ஆனால் யாருக்கும் அவர் பிடிகொடுக்கவில்லை.
தற்போது சுந்தர்.சியின் கலகலப்பு-2 படத்தில் நடித்து வருகிறார். இதுபற்றி நிக்கி கல்ராணி கூறுகையில், இந்த கலகலப்பு-2 படம் ஜனவரி மாதம் திரைக்கு வருகிறது. ஹர ஹர மகாதேவகி காமெடி படம் என்றபோதும், அடல்ட் ஒன்லி படமாகி விட்டது. ஆனால் கலகலப்பு-2 சுத்தமான காமெடி படம். அதனால் என் மீது விழுந்த அடல்ட் பட நடிகை என்கிற இமேஜை இந்த படம் மாற்றி விடும் என்கிறார் நிக்கி கல்ராணி.