தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
'மின்சாரக் கனவு', ' கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்' ஆகிய படங்களை இயக்கியவர் ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன். கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு படத்தை இயக்குகிறார் ராஜீவ் மேனன். அவர் அடுத்து இயக்கும் படத்தின் பெயர் 'சர்வம் தாள மயம்'.
இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடிக்கிறார். ராஜீவ் மேனன் இயக்கிய படங்களுக்கு தொடர்ந்து இசை அமைத்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார். இந்த படம் மியூசிக்கை மையப்படுத்தி எடுக்கப்படும் படம் என்பதால் இந்த படத்தில் 9 பாடல்கள் இடம்பெறவிருக்கின்றன.
இப்படம் குறித்து அறிவிப்பு வெளியாகி பல மாதங்களாகிவிட்ட நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. தற்போது இந்த படத்தின் நகர்வு குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பை டிசம்பர் மாதம் துவங்கவிருப்பதாக ராஜீவ் மேனன் அறிவித்துள்ளார்.
'மெர்சல்', '2.0' ஆகிய படங்களை தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கும் படம் இதுதான்.