ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கருணாநிதியின் மகன் மு.க.முத்துவின் பேரன் மனு ரஞ்சித்திற்கும், நடிகர் விக்ரமின் மகள் அக்ஷிதாவுக்கும், கடந்த ஜூலை 10-ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களது திருமணம் ஓராண்டு பிறகு இன்று(அக்., 30) நடந்தது.
திமுக., தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில், கருணாநிதி தலைமையில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் இரு வீட்டாரது நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
கடந்த ஓராண்டாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த கருணாநிதி, எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் ஓய்வில் இருந்து வந்தார். சமீபத்தில் முரசொலி அலுவலக கண்காட்சிக்கு வந்து பார்வையிட்டார். அதனையடுத்து இன்று தனது கொள்ளு பேரனின் திருமணத்தில் பங்கேற்றார்.