மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
நடிகை பிரியா ஆனந்த் மாதிரியே பிரியா பவானி சங்கரும் மாயவரத்து பொண்ணு. புதிய தலைமுறையில் செய்தி வாசிப்பாளராக சின்னத்திரைக்குள் வந்தார். அதன் பிறகு கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் நடித்தார். அதன் பிறகு சில நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு தொகுப்பாளராக பணியாற்றினார்.
இந்த நிலையில்தான் பிரியாவுக்கு மேயாதமான் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. படம் வெளியாகி பிரியாவுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுகளும் குவிந்தது. திரிஷாவின் சாயலில் இருக்கிறார் என்ற அழகு மாலை சூட்டிக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.
இந்த நிலையில் அடுத்து அவர் விஜய் சேதுபதி நடிக்கும் படம் ஒன்றில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். சினிமாவில் பிசியாகிவிட்ட பிரியா, சின்னத்திரைக்கு குட்பை சொல்கிறார். சின்னத்திரையிலிருந்து சினிமாவுக்கு சென்று பலர் ஹீரோவாகி விட்டார்கள். சின்னத்திரையிலிருந்து சென்று ஹீரோயின் ஆனவர்கள் பட்டியலில் பிரியாவும் இணைந்துள்ளார்.