தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழில் வெற்றி பெற்ற சிங்கம் படம், ஹிந்தியில் அஜய் தேவ்கன் நடிப்பில் ரீ-மேக்கானது. அங்கும் அந்தப்படம் வெற்றி பெற சிங்கம் 2-ம் பாகமும் வேறு ஒரு கதைக்களத்தில் (தமிழ் தழுவல் அல்ல) உருவானது. அந்தப்படமும் ஓரளவிற்கு வெற்றியை பெற்றது. இந்நிலையில் தமிழில் சிங்கம் 3 வெளியாகிவிட்ட நிலையில் ஹிந்தியிலும் சிங்கம் 3 உருவாக உள்ளது.
அப்படி உருவாகும் கதை, மலையாளத்தில் நிவின் பாலி நடிப்பில் வெளிவந்த ஆக்ஷ்ன் படமான ஹீரோ பிஜூவின் தழுவல் என்று கூறப்படுகிறது. இதுப்பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும், அதற்கான வேலைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது அஜய், ரெய்டு உள்ளிட்ட இரண்டு - மூன்று படங்கள் கைவசம் வைத்துள்ளார். அதையெல்லாம் முடித்த பின்னர் தான் சிங்கம் 3 ஆரம்பமாகும் என தெரிகிறது.