போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் |
'மெர்சல்' படத்தின் பெரிய வெற்றியால் தவிப்பில் இருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள். அந்தப் படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்பது அனைவருக்கும் தெரியும். இருந்தாலும் பல ஊர்களில் 'விவேகம்' படத்தின் மொத்த வசூலை பத்தே நாட்களில் 'மெர்சல்' கடந்துவிட்டதால் கடுப்பில் இருக்கிறார்கள்.
போதாக் குறைக்கு அஜித்தின் அடுத்த படத்தையும் சிவா இயக்கப் போகிறார் என்ற தகவல் ஏறக்குறைய உறுதியாக வெளிவந்ததும் அவர்களை கொஞ்சம் கோபத்தில் தள்ளியிருக்கிறது. இந்தத் தகவல் வெளியானதிலிருந்தே அஜித் ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்தைச் சொல்லி வருகிறார்கள்.
ஒரு அதி திவீர அஜித் ரசிகர், இயக்குனர் சிவாவிடம் இந்த விஷயங்களையெல்லாம் செய்யாதீர்கள் என 28 புள்ளி விவரங்களை டுவீட் செய்திருக்கிறார். அஜித்தின் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காகவே சிவா வேண்டுமென்றே சில காட்சிகளை வைப்பதாக அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.
ஒரே விதமான 'டெம்ப்ளேட்'டில் அஜித்தை சிவா காட்டுவதாக ஏற்கெனவே பலரும் விமர்சித்திருந்தனர். அப்படிப்பட்ட காட்சிகள் தான் 'விவேகம்' படத்தின் தோல்விக்குக் காரணமாக அமைந்தது. அதிலும் 'விவேகம்' படத்தில் இடம் பெற்ற அந்த பிரம்மாண்ட அணையிலிருந்த அஜித் தப்பிக்கும் காட்சி ஒன்று போதும்.
நேற்று மாலை முதலே சமூக வலைத்தளங்களில் அஜித் ரசிகர்களின் புலம்பல்கள் அதிகமாக இருந்தது. இந்த ரசிகர்கள் தான் இத்தனை வருடங்களாக அஜித்தையும், அஜித் படத்தையும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ரசிகர் மன்றங்கள் வேண்டாம் என்று அஜித் கலைத்துவிட்டாலும் அவர் மீது அதே அளவு அன்புடன் அஜித் ரசிகர்கள் இன்னும் இருக்கிறார்கள். அவர்களை திருப்திப்படுத்துவது அஜித்தின் கடமையும், அவரை வைத்து படம் இயக்கும் இயக்குனர்களின் கடமையும் ஆகும்.
அஜித், சிவா கூட்டணியின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வருவதற்கு முன்பே ரசிகர்களிடம் இருந்து இவ்வளவு ஆலோசனைகள் வருவது அஜித்தின் காதுகளுக்குச் சென்றடையுமா....?.