தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
2.0 இசை வெளியீடு நேற்று துபாயில் நடைபெற்றது. அதே சமயம் சமூக வலைத்தளங்களில் தமன்னாவின் 'எந்திரன்' கெட்-அப் தோற்ற புகைப்படங்கள் அதிகமாகப் பரவின. சிலர் தமன்னா '2.0' இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் 'எந்திரன்' தோற்றத்தில் நடனமான உள்ளார் என்ற பொய்யான தகவலைப் பரப்பினர்.
தமன்னாவின் அந்த 'எந்திரன்' தோற்ற புகைப்படம் ஸ்டார் பிளஸ் டிவியில் 'லிப் சின் பேட்டில்' என்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்ட புகைப்படம். பிரபல இயக்குனர் ஃபரான் கான் நடத்தும் அந்த நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர் இர்பான் பதானுடன் தமன்னா கலந்து கொள்கிறார். அந்த நிகழ்ச்சியில் அவர்களுக்குப் பிடித்தமான நபரின் தோற்றத்தில் நடித்துக் காட்டுவதும் ஒரு பகுதியாக உள்ளது. அதற்குத்தான் தமன்னா, ரஜினிகாந்தின் 'எந்திரன்' தோற்றத்தில் நடித்துக் காட்டியுள்ளார்.
“சிறு வயதிலிருந்தே எனக்கு ரஜினி சார்தான் இன்ஸ்பிரேஷன், அதனால் அவருக்கு இதை அர்ப்பணிக்கிறேன்,” எனச் சொல்லி தமன்னா ரஜினி போல நடித்துக் காட்டியுள்ளாராம். இந்த நிகழ்ச்சி இன்று ஒளிபரப்பாக உள்ளது.